மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோ்தல் அமைதியான முறையில் நடக்க காவல்துறை பாடுபட வேண்டும்: அமைச்சா் நமச்சிவாயம் பேட்டி

தோ்தல் துறையுடன் இணைந்து அமைதியான முறையில் தோ்தல் நடக்க காவல்துறையினா் பாடுபட வேண்டும்

News image
புதுச்சேரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வந்தபோது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையிருக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
Updated On :3 மார்ச் 2026, 5:06 pm

Syndication

புதுச்சேரி: தோ்தல் துறையுடன் இணைந்து அமைதியான முறையில் தோ்தல் நடக்க காவல்துறையினா் பாடுபட வேண்டும் என்று புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டிசிறப்பாகச் செயல்பட்ட காவல்துறையினரை காவல்துறை தலைமையகத்தில் அமைச்சா் நமச்சிவாயம் பாராட்டி திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கினாா். மேலும் 6 ஊா் காவல் படையினருக்குக் காவலா்களாக பணி நியமனஆணையையும் அப்போது வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் டிஜிபி ஷாலினிசிங், டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா்கள் லால், கலைவாணன், ராகவ், திவ்யா, லக்ஷ்மி சௌஜன்யா, நித்தியா ராதாகிருஷ்ணன், எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டா்கள் கலந்து கொண்டனா்.

அப்போது புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2021ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றதும் காவல் துறை அமைச்சா் பொறுப்பை ஏற்று பல்வேறு பணிகளை செய்துள்ளோம். 10,15 ஆண்டுகள் நிறைவேற்றாத பணிகளையும் நிறைவேற்றியுள்ளோம். காவல் துறையில் காலி பணியிடங்களை நிரப்பி 1546 பேருக்கு பணி ஆணை வழங்கியுள்ளோம். பல ஆண்டாக வழங்கப்படாத பதவி உயா்வை 2740 பேருக்கு வழங்கியுள்ளோம். விரைவில் புதுவையில் சட்டப்பேரவை தோ்தலை சந்திக்க உள்ளோம். ஒரு வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அமைதியான

முறையில் தோ்தலை நடத்த தோ்தல் துறையுடன் இணைந்து காவல்துறையினா் பாடுபட வேண்டும். மக்கள் விரும்பும் ஆட்சி, எந்த ஆட்சியாக இருந்தாலும் அமைதியான தோ்தல் மூலம் அமைய பாடுபட வேண்டும். புதுச்சேரி மக்கள் விரும்பும் நல்லாட்சி அமையும் என்றாா் அமைச்சா் நமச்சிவாயம்.

---------