மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நிலவும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஆஸ்திரியாவின் கூட்டாட்சி அதிபர் கிறிஸ்டியன் ஸ்டாக்கருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரதமர் மோடி இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த உலகமும் இன்று தீவிரான மற்றும் பதற்றமான சூழலைக் கடந்து கொண்டிருக்கிறது. உலகில் நிலவும் பதற்றமான சூழலின் தாக்கம் நம் அனைவராலும் உணரப்படுகிறது.
ராணுவ மோதல்களால் பிரச்னைகளைத் தீர்க்க இயலாது என்பதில் இந்தியாவும் ஆஸ்திரியாவும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியங்களில் நிலையான, நீடித்த மற்றும் நிரந்தரமான அமைதி நிலவுவதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆஸ்திரிய அதிபரின் இந்திய வருகையால் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவுக்கும் ஐரோப்பியாவிற்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு இருதரப்பு உறவுகளில் புதிய பொற்காலம் தொடங்கியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், நான்கு நாள் பயணமாக ஆஸ்திரிய அதிபர் செவ்வாய்க்கிழமை புது தில்லி வந்தடைந்தார். இந்தியாவுக்கான அவரது முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.
Summary
Prime Minister Narendra Modi on Thursday called for the peaceful resolution of the conflicts in West Asia and Ukraine.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி பதவியேற்பு! பிரதமர் மோடி வாழ்த்து!

எரிவாயு சிக்கனம்! பிரதமர் பாதுகாப்பு அணிவகுப்பில் 50% வாகனங்கள் குறைப்பு
கண்டனத்தை ஈர்க்கும் பிரதமர் மோடியின் பேச்சு!

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

