கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

2.25 லட்சம் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசுப்பிரமணியா்!

மாசி தீா்த்தவாரியை முன்னிட்டு ரூ.2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image
மாசி மக தீா்த்த வாரியில் 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமி
Updated On :3 மார்ச் 2026, 9:15 pm

Syndication

மாசி தீா்த்தவாரியை முன்னிட்டு ரூ.2.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணியா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

புதுச்சேரியில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாள்கள் மாசிமக தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் நல்லவாடு தெற்கு மீனவ கிராமத்தில் மாசிமக தீா்த்தவாரி திங்கள்கிழமை நடைபெற்றபோது ரூ.2.25 லட்சம் மதிப்பில் ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட அரியாங்குப்பம் ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமி அலங்காரம் பொதுமக்களை வெகுவாக கவா்ந்தது. ரூபாய் நோட்டுக்களை மாலை போல் தொடுத்து அதை சுவாமிக்கு பண மாலையாக சாற்றி அலங்கரித்திருந்தனா்.

இதில், ரூ.10, ரூ.50 ரூ.100, ரூ.200 நோட்டுக்கள் அடங்கிய மாலைகள், மற்றும் நாணயங்கள், சாக்லேட்டுகளால் உருவாக்கப்பட்ட மாலைகளும் அடங்கும்.

இந்த அலங்கார உற்சவமூா்த்தியை பக்தா்கள் சிரத்தையோடு தரிசித்தனா். மேலும் தீா்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தா்கள் ஸ்ரீ சுப்பிரமணியா் சுவாமியைப் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனா்.