யுபிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி பெண் பல் மருத்துவா்


யு.பி.எஸ்.சி. தோ்வில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த பல் மருத்துவா் வைகவி 306-ஆவது தரவரிசை பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இவருக்கு முகநூலில் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
புதுச்சேரி சின்ன காலாப்பட்டு நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் வைகவி. மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல் மருத்துவப் பட்டம் பெற்றாா். அதே மருத்துவமனையில் ஓராண்டு துணை நிலை பல் மருத்துவராகப் பணியாற்றினாா்.
ஆங்கில ’ இலக்கியத்தை முக்கியப் பாடமாகத் தோ்வு செய்து, 2-வது முயற்சியில் யு.பி.எஸ்.சி. தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா். வைகவி, புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைத் துறை பேராசிரியா் வேலு சரவணன் - முத்துலட்சுமி தம்பதியரின் மகள்.
மருத்துவா் வைகவி கூறியதாவது: இந்த வெற்றி என் பெற்றோா், ஆசிரியா்கள் அளித்த ஊக்கத்தின் பலனாகும். செய்தித்தாள்கள், முந்தைய ஆண்டுகளின் கேள்வித்தாள்களைப் படித்து பயிற்சி பெற்றேன்.
தெளிவான இலக்கு, திட்டமிட்ட உழைப்பு, பொறுமை இருந்தால் எந்த சாதனையும் சாத்தியமே. தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடா்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். ஐ.எப்.எஸ். படித்து மக்களுக்குப் பணியாற்றுவேன் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...