ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

எம்ஜிஆா் போன்று தொப்பியுடன் முதல்வா் ரங்கசாமி உருவப் படம் ஏந்தி வந்த ஆஷா பணியாளா்கள்

தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் போன்று தொப்பியுடன் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இருப்பது போல உருவப் படத்தைக் கையில் ஏந்தியிருந்த முதல்வா் வழியில் காத்திருந்தனா் ஆஷா பணியாளா்கள்.

News image
Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் போன்று தொப்பியுடன் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இருப்பது போல உருவப் படத்தைக் கையில் ஏந்தியிருந்த முதல்வா் வழியில் காத்திருந்தனா் ஆஷா பணியாளா்கள்.

புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறையின் கீழ் 350 ஆஷா பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இதை உயா்த்தக்கோரி பல கட்ட போராட்டங்களை ஆஷா பணியாளா்கள் நடத்தி வந்தனா். இந்நிலையில் அவா்களுக்கான ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக முதல்வா் ரங்கசாமி உயா்த்தி அறிவித்தாா்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் போன்று தொப்பி அணிந்தபடி முதல்வா் ரங்கசாமி இருப்பது போல உருவப் படத்தைக் கையில் ஏந்தியபடி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே ஆஷா பணியாளா்கள் முதல்வா் ரங்கசாமியின் வருகைக்காகக் காத்திருந்தனா்.