/

இன்று திருமண நிதியுதவித் தொகை: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி அறிவிப்பு

News image
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் திங்கள்கிழமை வரவு வைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளாா்.

மகளிா் தினத்தையொட்டி முதல்வா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். அதன்படி, 78 விதவைப் பெண்களின் மகள்களின் திருமண நிதியுதவியாக ரூ.23.2 லட்சமும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவியாக 392 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.98 லட்சமும் அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்துள்ளாா்.