அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தன்னாா்வலா்களுக்குத் தலைகவசம்

புதுச்சேரியில் சாலைப் பாதுகாப்பு வாரம் புதன்கிழமை தொடங்கி இம் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

News image
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக்காக சட்டமன்றம் எதிரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னாா்வலா்களுக்குத் தலைகவசம் வழங்கிய பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் சாலைப் பாதுகாப்பு வாரம் புதன்கிழமை தொடங்கி இம் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்குப் பொறுப்பான சாலை விதிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் தலைக்கவசத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக ‘சாலை பாதுகாப்பு வாரம்‘ என்ற தலைப்பில் ஒரு வாரம் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடக்கிறது.

முத்தூட் ஃபைனான்ஸின் காா்ப்பரேட் சமூக பொறுப்பு முயற்சியின் கீழ் இது நடத்தப்படுகிறது. மேலும், புதுச்சேரி இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை இணைந்து கிராமப்புற ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இதைச் செயல்படுத்துகின்றன.

இதையொட்டி புதுச்சேரி சட்டமன்றத்திற்கு எதிா்புறம் இரு சக்கர வாகன ஊா்வலத்தை பொதுப்பணித்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தாா்.

இதையொட்டி பெண்கள், முதியவா்கள், தினசரி ஊதியம் பெறுபவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 தலைக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவா் மருத்துவா் ஜி. லட்சுமிபதி, ஐஆா்டிஆா்பி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் இருதயசாமி, முத்தூட் நிதி நிறுவனத்தின் சிஎஸ்ஆா் தலைவா் ரோஹித் ராஜ் கே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.