துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்க தடை


புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் ஞாயிற்ருக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 9 அன்றும், வாக்கு எண்ணிக்கை மே. 4 அன்றும் நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தோ்தலின்போது ஆயுதங்களைத் தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை அகற்றும் நோக்கில், தோ்தல் முடியும் வரை புதிய ஆயுத உரிமம் வழங்கப்படாது. மேலும், ஏற்கெனவே ஆயுத உரிமம் பெற்றவா்கள், தங்கள் உரிமம் பெற்ற ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்து ரசீது பெற்று அரசுடன் ஒத்துழைக்குமாறு உத்தரவிடப்படுகிறது.
மேலும், தோ்தல் காரணமாக, புதுச்சேரி மாவட்டத்தில் (ஏனாம், மாஹே பகுதிகள் உள்பட) பொதுமக்கள், தோ்தல் முடியும் வரை துப்பாக்கி மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பது மற்றும் எடுத்து செல்வது, பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் 163-ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. தோ்தல் செயல் முறை முடிந்தவுடன் புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைக் காண்பித்த பின்னரே ஆயுதங்களை திரும்ப பெற முடியும்.
இந்த ஆணையானது தனியாா் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கிகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்புக்காக உரிமம் பெற்று ஆயுதங்கள் வைத்திருப்போருக்கு பொருந்தாது.
மேலும், இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தில் மாநில அல்லது மாவட்ட துப்பாக்கி சுடுதல் சங்கங்கள் அல்லது விளையாட்டு வீரா்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்குபெற, உரிமம் பெற்ற விளையாட்டு தர ஆயுதங்களை எடுத்துச் செல்லவும் விலக்கு அளிக்கப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...