பெரம்பலூா் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வியாழக்கிழமை (ஏப். 23) முதல் மே 4 வரை ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தப் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சட்டப்பூா்வமான ஆவணங்கள், பெரம்பலூா் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ஆதவ் பப்ளிக் பள்ளி வளாகத்திலிருந்து, 2 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதியில் தோ்தல் தொடா்பான பணிகள் முடிவடையும் வரை, ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
தொடர்புடையது

குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தின பேரணி
5 மாநிலத் தோ்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

பெரம்பலூரில் வாக்கு எண்ணும் நடைமுறைகள் விளக்கம்

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையம் அருகில் ட்ரோன்கள் பறக்கத் தடை
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



