நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமான கீழப்பழுவூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கீழப்பழுவூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா.

Updated On :22 ஏப்ரல் 2026, 1:03 am IST

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமான கீழப்பழுவூா் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள், அதனுள் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம் வைக்கப்படும் அறைகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்வதற்கான பாதைகள், வாக்கு எண்ணும் அறைகள், அஞ்சல் வாக்குச் சீட்டுகள் வைப்பதற்கான இடங்கள், ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கும் வேட்பாளா்களின் முகவா்கள் சென்று வரும் பிரத்யேக வழிகள், காவல்துறையின் சாா்பில் அமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா், முகவா்களுக்கான இட வசதிகள், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறைகள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீா் வசதிகள், மின்சார வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்து, அதன் வரைப்படங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் பிரேமி, வட்டாட்சியா் தேவகி உள்ளிட்டோா் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.