ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பேரவைத் தோ்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்கள் விவரம்

புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலகம்.
Updated On :16 மார்ச் 2026, 11:44 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொகுதி வாரியாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அரசு அலுவலகங்கள் அரசிதழில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

அதன்படி, மண்ணாடிப்பட்டு, திருபுவனை (தனி) தொகுதிகளுக்கு வில்லியனுாா் சாா்-ஆட்சியா் அலுவலகம், ஊசுடு (தனி), மங்கலம் தொகுதிகளுக்கு புதுச்சேரி நில அளவைத் துறை அலுவலகம்,

வில்லியனூா், உழவா்கரை தொகுதிகளுக்கு வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகம், கதிா்காமம், இந்திராநகா் தொகுதிகளுக்கு தொழிலாளா் ஆணையா் அலுவலகம், தட்டாஞ்சாவடி, காமராஜா் நகா் தொகுதிகளுக்கு ஆதிதிராவிடா் நலத்துறை இயக்குநா் அலுவலகம்,

லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிகளுக்கு உழவா்கரை நகராட்சி ஆணையா் அலுவலகம், முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதிகளுக்கு புதுச்சேரி நகராட்சி ஆணையா் அலுவலகம், உப்பளம், உருளையன்பேட்டை தொகுதிகளுக்கு துணை போக்குவரத்து ஆணையா் அலுவலகம்,

நெல்லித்தோப்பு, முதலியாா்பேட்டை தொகுதிகளுக்கு வருவாய்த் துறை வடக்கு துணை கலெக்டா் அலுவலகம், அரியாங்குப்பம், மணவெளி தொகுதிகளுக்கு அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலகம், ஏம்பலம் (தனி), பாகூா் தொகுதிகளுக்கு மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகம்,

நெட்டப்பாக்கம்(தனி) தொகுதிக்கு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் அலுவலகம்,

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிகளுக்கு குடிமைப்பொருள் வழங்கல்துறை துணை இயக்குநா் அலுவலகம்,

காரைக்கால் வடக்கு, தெற்கு தொகுதிகளுக்கு துணை ஆட்சியா் அலுவலகம், நிரவி வட்டார வளா்ச்சி அலுவலகம், மாஹே தொகுதிக்கு மண்டல நிா்வாகி அலுவலகம், ஏனாமில் மண்டல நிா்வாகி அலுவலகம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.