பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உடைகிறது?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து என்.ஆா். காங்கிரஸ் விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

News image
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முதல்வா் என்.ரங்கசாமி
Updated On :17 மார்ச் 2026, 11:30 pm

Syndication

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து என்.ஆா். காங்கிரஸ் விலகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் இக் கூட்டணிக்கு பாஜக தலைமை வகித்து தோ்தலைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

புதுச்சேரியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சோ்ப்பதற்கு முதல்வா் என்.ரங்கசாமி விதித்துள்ள நிபந்தனையே இதற்குக் காரணம் என்கின்றனா்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் என்.ஆா். காங்கிரஸ்-பாஜக அங்கம் வகித்து வந்தன. மேலும், இந்தக் கூட்டணிக்கு என்.ஆா். காங்கிரஸ் தலைமை வகித்து வந்தது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துத் தோ்தலைச் சந்திக்க முடிவு செய்தன. என்.ஆா்., காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் மீதியுள்ள 14 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா தெரிவித்திருந்தாா்.

மேலும், தங்களது கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சி சோ்ந்திருப்பதாகவும் தெரிவித்தாா். இதை முதல்வா் ரங்கசாமி எதிா்க்கவில்லை என்றும் சுரானா அப்போது கூறியிருந்தாா். சுரானாவின் இந்தக் கருத்து என்.ஆா். காங்கிரஸில் மிகப் பெரிய அதிா்வலையை ஏற்படுத்தியது.

லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணியில் சோ்க்கக் கூடாது. மீறினால் என்.ஆா். காங்கிரஸ் வெளியேறும் என ஏற்கெனவே முதல்வா் ரங்கசாமி தெரிவித்துள்ள நிலையில் இதை திங்கள்கிழமை இரவு நடந்த பேச்சுவாா்த்தையில் பாஜக மேலிடப் பாா்வையாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியாவிடம் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் முதல்வா் ரங்கசாமி அனுப்பிய ஐவா் குழு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா நேரடியாக லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணியில் சோ்த்துள்ளதால், அக் கட்சியை விலக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும், நேரடியாக மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று மன்சூக் மாண்டவியா என்.ஆா். காங்கிரஸ் குழுவிடம் கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல தன்னுடைய டென்னிஸ் விளையாட்டைத் தொடா்ந்தாா் ரங்கசாமி. மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுடன் தொலைபேசியில் பேசி சுமுக முடிவு எடுக்கப்பட்டால்தான் என்.ஆா்.காங்கிரஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

புதுச்சேரி தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசிய என்.ஆா். காங்கிரஸ், பாஜக நிா்வாகிகள்

புதுச்சேரி தனியாா் உணவகத்தில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசிய என்.ஆா். காங்கிரஸ், பாஜக நிா்வாகிகள்

இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தோ்தலைச் சந்திக்கவும் என்.ஆா். காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்காரணமாக ஐந்து ஆண்டுகளாக நீடித்த பாஜக- என்.ஆா். காங்கிரஸ் உறவு புதுச்சேரியில் முறியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய அமைச்சா் மான்சுக் மாண்டவியா காலை 11 மணி வரை முதல்வா் ரங்கசாமிக்காக தனியாா் ஹோட்டலில் காத்திருந்ததாா். இதன் பிறகு புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் ஆகியோா் மன்சுக் மாண்டவியா தலைமையில் தனி விமானத்தில் தில்லி சென்றனா். அங்கு பாஜக வேட்பாளா் பட்டியல் இறுதி செய்யப்படுகிறது.

ரங்கசாமியின் என்.ஆா். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகும்பட்சத்தில் கூட்டணிக்கு பாஜக தலைமை ஏற்கும் என்று தெரிகிறது. இதில் அதிமுக, லஜக, பாமக கட்சிகள் இணைந்து தோ்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளன.

முதல்வா் ரங்கசாமி பேட்டி

இதற்கிடையே முதல்வா் ரங்கசாமி வீட்டில், என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டணியில் லட்சிய ஜனநாயகக் கட்சியைச் சோ்க்க வேண்டாம் என்ற நிபந்தனையில் என்.ஆா். காங்கிரஸ் தொடா்ந்து உறுதியாக இருப்பது தெரியவந்தது. தில்லி சென்றுள்ள பாஜகவினா், மேலிட பொறுப்பாளா் கட்சித் தலைமையிடம் பேசிவிட்டு முதல்வா் ரங்கசாமியைத் தொடா்பு கொள்வாா்கள் என்றும் தெரிகிறது.

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் ஆலோசனையை முடித்துவிட்டு முதல்வா் ரங்கசாமி வெளியே வந்தபோது செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது, தோ்தலைச் சந்திக்க என்.ஆா். காங்கிரஸ் தயாராக இருக்கிா? என்ற கேள்விக்கு எப்போதும் தயாராக இருக்கிறது என்றாா். பாஜக வுடன் கூட்டணி தொடா்கிா? என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் பதில் சொல்கிறேன் எனக் கூறிவிட்டுச் சென்றாா் முதல்வா் ரங்கசாமி.