புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது.
திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தாமதமானதால் முன்னெச்சரிக்கையாக 30 தொகுதிகளிலும் இரு கட்சிகள் சார்பிலும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
பின்னர், காங்கிரஸுக்கு 16, திமுகவுக்கு 13, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி என ஒப்பந்தம் கையொப்பமானது.
அதன்படி, வில்லியனூர், மங்களம், திருபுவனை, பாகூர், முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு, கதிர்காமம், காரைக்கால் தெற்கு, டி.ஆர். பட்டினம் ஆகிய தொகுதிகளில் திமுகவும், உழவர்கரை தொகுதியில் விசிகவும் போட்டியிடுகின்றன.
இதனிடையே, ஊசுடு மற்றும் நெட்டப்பாக்கம் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் 6 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால், திமுகவும் காங்கிரஸும் 6 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடவுள்ளதால் புதுவையில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் நாளை திரும்பப் பெறவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.
Summary
Puducherry: DMK and Congress in Direct Clash in 6 Constituencies!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போட்டி வேட்பாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி: திமுக அதிா்ச்சி

புதுச்சேரி: மீண்டும் வெல்லுமா என்.ஆர். மாயாஜாலம்?

திமுகவுடனான கூட்டணியை உடைக்க விரும்பவில்லை: நாராயணசாமி
தொடரும் இழுபறி! புதுவையில் வேட்புமனுத் தாக்கலுக்கு தயாராகும் திமுக!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


