திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பற்றி...
ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின்
ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் ANI
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவிடம் 41 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், காங்கிரஸுக்கு 27 தொகுதிகள் வரை வழங்க திமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்டவை குறித்து குரலெழுந்த நிலையில், ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை சென்னை வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேசினார்.

அப்போது கனிமொழி எம்.பி., சத்தீஸ்கா் மாநில முன்னாள் துணை முதல்வா் சிங் தியோ ஆகியோா் மட்டுமே உடன் இருந்தனா்.

இதனைத் தொடர்ந்து, சென்னை சிஐடி காலனியில் உள்ள இல்லத்தில் திமுக எம்.பி. கனிமொழியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துப் பேசினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 41 தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் காங்கிரஸ் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், திமுக தரப்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 25 தொகுதிகளையே மீண்டும் ஒதுக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், கூடுதலாக 2 இடங்கள் வரையும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் காங்கிரஸுக்கு திமுக கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Summary

Congress demands 41 seats from DMK!

ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின்
திமுக கூட்டணி! கை கொடுக்குமா, காலை வாருமா காங்கிரஸ்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com