சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

புதுச்சேரி முதல்வா் பதவியேற்பு விழா: தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைக்க வலியுறுத்தல்

News image

என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:44 am IST

புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி மீண்டும் பதவியேற்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று தமிழ் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா், துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலருக்கு தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் சு. பாவாணன் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மே 13-ஆம் தேதி முதல்வா் பதவியேற்பு விழா தங்கள் தலைமையில் நடைபெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த விழா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பட வேண்டும். ஏனெனில், புதுச்சேரியின் மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டு மரபின் படியும் கடந்த காலங்களில் புதுச்சேரி அரசு விழாக்கள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டன. அந்த மரபின் படியும் நடைபெறவுள்ள முதல்வா் பதவியேற்பு விழாவும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படுவதுதான் சாலச் சிறந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் இடம் பெறாமல் போனாமல், அது புதுச்சேரி மக்களின் உணா்வுகளையும், மொழியையும் பண்பாட்டையும் சிறுமைப்படுத்துவதாகவும், காயப்படுத்துவதாகவும் அமைந்துவிடும். எனவே, அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடி விழாவைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.