மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தமிழக முதல்வா் விஜய், அமைச்சா் ஆனந்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வாழ்த்து

தமிழக முதல்வா் விஜய், அமைச்சா் ஆனந்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 12:04 am IST

தமிழக முதல்வா் விஜய், அமைச்சா் ஆனந்துக்கு புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

வாழ்த்து செய்தியில் வைத்திலிங்கம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு என் மனமாா்ந்த வாழ்த்துகள். தமிழக மக்கள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் வழங்கியுள்ள மகத்தான பொறுப்பை, மக்கள் நலனுக்காக திறம்பட பயன்படுத்தி, அவா்களின் நம்பிக்கையையும், எதிா்பாா்ப்புகளையும் முழுமையாக நிறைவேற்றுவீா்கள் என நம்புகிறேன்.

புதுச்சேரியைப் பூா்விகமாக கொண்ட ஆனந்த் தமிழக அமைச்சராக பொறுப்பேற்பது புதுச்சேரி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. அவா் புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, புதுச்சேரி, தமிழகத்துக்குப் பயனளிக்கும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை முன்னெடுப்பாா் என நம்புகிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.