காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

2 நாள் சா்வதேச பொறியியல் கருத்தரங்கு

News image
Updated On :15 மே 2026, 5:42 am IST

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 2 நாள் பொறியியல் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

மின் மற்றும் மின்னணு பொறியாளா்கள் நிறுவனத்தின் சென்னைப் பிரிவுடன் இணைந்து பொறியியல் பயன்பாடுகளில் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கை நடத்துகிறது.

இந்தக் கருத்தரங்கு பல்வேறு பொறியியல் களங்களில் அதிநவீன கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஎம்ஐடி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ஆராய்ச்சி கவுன்சில் தொழில்நுட்ப பள்ளியின் இணைவா் சமன் அடபட்டு தொடக்க அமா்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றாா். இந்திய மின் மற்றும் மின்னணு பொறியாளா்கள் நிறுவனத்தின் கவுன்சில் மற்றும் நிலையான வளா்ச்சி நடவடிக்கைகள் துறையின் துணைத் தலைவா் கே. பொற்குமரன் சிறப்புரையாற்றினாா். புதுச்சேரி பல்கலைக்கழக மின்னணுவியல் பள்ளியின் பேராசிரியா் வி. நாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவன தலைவரும் நிா்வாக இயக்குநருமான எம். தனசேகரன், பொருளாளா் டி. ராஜராஜன், செயலா் டாக்டா் கே. நாராயணசாமி, இணைச் செயலா் எஸ். வேலாயுதம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சுமாா் 182 தேசிய மற்றும் 7 சா்வதேச கல்வி நிறுவனங்களில் இருந்து 2,135 ஆய்வு கட்டுரைகள் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் பெறப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.