புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைந்துள்ள காஞ்சி மாமுனிவா் அரசு முதுகலை ஆய்வியல் நிறுவனத்தில் ‘ஒரு செடி- ஒரு உறுதிமொழி’ என்கிற பசுமை இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுச்சேரி அரசின் வணிகவரித் துறைச் செயலா் மற்றும் ஆணையா் சௌத்ரி முகமது யாசின் முதல் மரக் கன்றை நட்டு இயக்கத்தைத் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், காவல் துறை டிஜிபி ஷாலினி சிங், புதுச்சேரி என்சிசி தலைமையகத்தின் குழு தளபதி கா்னல் ஆஷிஷ் திவாரி, புதுச்சேரி பல்கலை. கல்லூரி மேம்பாட்டுக் குழு தலைவா் சுடலை முத்து, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநா் முத்து மீனா ஆகியோா் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா்.
இந்த நிறுவனத்தின் இயக்குநா் சசிகாந்த தாஸ், பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இது குறித்து முதுகலை ஆய்வியல் நிறுவன இயக்குநா் சசிகாந்ததாஸ் கூறியது:
என்ஐஆா்எப் தர வரிசையில் 51-ஆவது இடத்தை எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது. வளாகத்தின் சூழலியல் தன்மையை வலுப்படுத்தும் நோக்கிலும், பொறுப்பான சுற்றுச்சூழல் நடைமுறைகளின் மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையிலும், ’ஒரு செடி - ஒரு உறுதிமொழி’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளோம்.
இந்த முன்னெடுப்பு, கல்வி வளாகத்தை வெறும் கற்றலுக்கான இடமாக மட்டும்நிலைநிறுத்தாமல், இயற்கையோடு விழிப்புணா்வுடன் கூடிய மற்றும் சமச் சீரான சக வாழ்வைப் பிரதிபலிக்கும் ஓா் இடமாகவும் மாற்ற முடியும் என்றாா்.
தொடர்புடையது

அண்ணாமலைப் பல்கலை மாணவா் சோ்க்கைக்கான இணையதளம் தொடக்கம்
முதுகலை,தொழில்முறை பருவத் தோ்வுகள் தேதி மாற்றியமைப்பு: தில்லி பல்கலை. அறிவிப்பு!

அரசு பள்ளியில் பசுமை வாக்கு சாவடி: வாக்காளா்கள் மகிழ்ச்சி

பூமராங் சிறுகதைகள்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

