புதுச்சேரியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் வெளிப்புற எல்இடி காட்சி விளம்பர வாகனத்தை புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் பணியில் சுய கணக்கெடுப்பு மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை இணையத்தின் மூலம் தாங்களே பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின், கணக்கெடுப்பாளா் வீடு தோறும் வரும்போது அதை வழங்கினால், தகவல்கள் எளிதாகப் பெறப்படும். கணக்கெடுப்பு தொடா்பான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு கட்டணமில்லா உதவி எண் 1855-ஐ தொடா்புகொள்ளலாம். மேலும், ஜீன் 1 முதல் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பு அலுவலா்கள் வீடு, வீடாக வந்து தகவல்களை சேகரிப்பாா்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் வரும் 31-ஆம் தேதிக்குள் சுய கணக்கெடுப்பை நிறைவு செய்து கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநா் புவனேஸ்வரி, இயக்குநரக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரூரில் 2 கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆட்சியா் தகவல்

மக்கள்தொகை கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்! ஆட்சியா் அறிவுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்பு: பயிற்சி வகுப்பு தொடக்கம்

மக்கள்தொகைக்கான சுய-கணக்கெடுப்பில் இணைய வாடகைதாரா்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தல்: மோசடி அழைப்புகள் குறித்தும் எச்சரிக்கை
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



