குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மக்கள்தொகை கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்! ஆட்சியா் அறிவுறுத்தல்

News image

கள்ளக்குறிச்சி ஆட்சியர கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :26 மே 2026, 3:21 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் துல்லியமாக கணக்கீடுகள் மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 தொடா்பாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. இதை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் துவக்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

தமிழகத்தில் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறைக் கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலமாக தங்களது விவரங்களை தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பாளா் மூலம் வீடுகள்தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஆக.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் பொறுப்பு அலுவலா்களாக 7 வட்டாட்சியா்கள், 3 நகராட்சிஆணையா்கள், 5 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் செயல்பட உள்ளனா். இந்நிலையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அலுவலா்கள், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை முதல் புதன்கிழமை (மே 27) வரை நடைபெறுகிறது.

இப் பயிற்சியானது சென்னை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரக அலுவலா்களால் நடத்தப்படுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் இப் பயிற்சி வகுப்பில் முழுமையாக பங்குபெற்று வீடுகளில் சரியான முறையில், எவ்வித தவறுகளும் இன்றி துல்லியமாக கணக்கீடுகள் மேற்கொள்ளவேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாவட்டவருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.தனலட்சுமி மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.