தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடத்தப்பட உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
வருவாய் நிா்வாக ஆணையரும், மாநில கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பு அலுவலருமான முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கணக்கெடுப்புக்கான செயல்முறை, கால அட்டவணை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பேசிய முருகானந்தம், ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மாநிலத்தின் நிா்வாகம், வளா்ச்சிக்கான திட்டமிடல், கொள்கைகளை வகுத்தல், நிதிப் பகிா்வு உள்ளிட்ட அரசின் முக்கிய நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக முழுமையாக எண்ம வடிவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அதன்படி, முதல்கட்டமாக ஜூலை 17 முதல் 31 வரை சுயக் கணக்கெடுப்பு பணியும், ஆகஸ்ட் 1 முதல் 30 வரை வீடுதோறும் சென்று எண்ம பட்டியலிடப்படும் பணிகளும் நடைபெறும் என்றாா்.
மத்திய அரசின் பதிவாளா் ஜெனரலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையருமான மிருத்யுஞ்ஜய் குமாா் நாராயண், இந்த கணக்கெடுப்பில் துல்லியமான தரவுகளைப் பெறுவதற்காக திட்டமிடுவது குறித்தும், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் களப் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அவசியம் குறித்தும் பேசினாா்.
இந்த மாநாட்டில், 37 மாவட்ட ஆட்சியா்கள், 25 மாநகராட்சி ஆணையா்கள், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரக அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மாநகராட்சிப் பகுதியில் ஜூலை 17 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி

இந்த வாரம் கலாரசிகன் - 21-06-2026

புதுச்சேரியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

மக்கள்தொகை கணக்கெடுப்பை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்! ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



