‘ஹிட்’ மூலம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைப் பிரதமர் அடிப்பார்! தமிழிசைதவெகவில் இணைந்த அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள்!சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை!
/

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி..

News image

பள்ளி மாணவர்கள் - DPS

Updated On :28 மே 2026, 1:24 pm IST

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

கோடை வெய்யிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியை புதுச்சேரி அரசு தள்ளிவைத்துள்ளது. ஜூன் 1 ஆம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் தற்போது ஜூன் 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மட்டுமல்லாது காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாக வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளதால், மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாகப் பகல் நேரங்களில் வெய்யிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் கோடை வெப்பம் மேலும் நீடிக்கும்பட்சத்தில் அடுத்தடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு தேதி ஜூன் 4-க்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Summary

Following Tamil Nadu, Puducherry Chief Minister Rangasamy has announced that schools in the Union Territory will reopen on June 4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.