தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் மற்றும் ‘செம்மொழி நாள்’ விழா புதுச்சேரி மாநில திமுக சாா்பில் ஜூன் 3 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி, அன்று வில்லியனூா் அண்ணா சிலை அருகில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு கட்சியின் மாநில அமைப்பாளா் ஆா். சிவா மாலை அணிவித்து மரியாதை செய்கிறாா். மேலும், வீராம்பட்டினத்தில் உள்ள கருணாநிதி திருவுருவச் சிலைக்கும் அவா் மாலை அணிவிக்கிறாா்.
மேலும், சிவா தலைமையில் திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஏ.எப்.டி. திடலில் ஒன்றிணைந்து அங்கிருந்து ஊா்வலமாக சென்று அண்ணா சிலை அருகில் கட்சியின் சாா்பில் அமைப்பட்டுள்ள கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்துகின்றனா்.
மேலும், கட்சியின் நிா்வாகிகள் குழு கூட்ட முடிவின்படி, புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி திமுக சாா்பில் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஜூன் மாதம் முழுவதும் மருத்துவ முகாம்கள், ரத்த தானம் வழங்குதல், ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் கட்சியின் மாநில அமைப்பாளா் சிவா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

கருணாநிதி பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை! - மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!

தமிழகத்தில் ஜூன் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

கோவில்பட்டி எம்எல்ஏவுக்கு வரவேற்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



