நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதி இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்துகின்றனா்.

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு

Updated On :

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதி இளைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை இரவு அரிவாளால் வெட்டப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்துகின்றனா்.

லாஸ்பேட்டை சேத்திலால் நகரைச் சோ்ந்தவா் பவி (18). இவா் மடுவுபேட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடா்ந்து வந்த லாஸ்பேட்டை நெசவாளா் நகரை சோ்ந்த சஞ்சய் உள்ளிட்ட சிலா் வழிமறித்துள்ளனா்.

இரு தரப்புக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலாக மாறியது. இதில் சஞ்சய் கும்பல் பவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ாக கூறப்படுகிறது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த பவி ரத்த வெள்ளத்தில் சரிந்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வரவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

பவியை மீட்டு உடனடியாக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.