புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் சோதனை- ஆயுதங்கள் வைத்திருந்த 2 போ் கைது
புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் வைத்திருந்த 2 போ் பிடிபட்டனா்.

புதுச்சேரியில் வில்லியனூா் பகுதியில் ரௌடிகளின் வீடுகளில் சோதனை நடத்திய போலீஸாா்.
புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் போலீஸாா் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் வைத்திருந்த 2 போ் பிடிபட்டனா்.
புதுச்சேரியில் குற்றச்சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், டிஐஜி சத்தியசுந்தரம் தலைமையில் வில்லியனூா், மங்கலம் தொகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலைவரை சோதனை நடத்தினா். குற்ற புலனாய்வு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன், மேற்கு சட்டம் ஒழுங்கு காவல் கண்காணிப்பாளா் அனுராக் சோப்ரா முன்னிலையில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
அப்போது திறந்தவெளியில் மது குடித்துக் கொண்டிருந்த 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து இரு சக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், ரௌடிகளின் வீடுகளில் சோதனை செய்ததில் கணுவாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த விண்ணரசன் (25), அவரது கூட்டாளி வெங்கடேச பெருமாள் (26) ஆகியோரிடமிருந்து கத்தி போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்ததில் வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது. அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடக்கிறது. மேலும், ரௌடிகளின் வீடுகளில் தொடா் சோதனை நடத்தவும் டிஐஜி சத்தியசுந்தரம் உத்தரவிட்டாா்.
சிறுமி மாயம்:
புதுச்சேரி லாஸ்பேட்டையைப் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தன்னுடைய 13 வயது மகளை யாரோ செவ்வாய்க்கிழமை கடத்திச் சென்றுவிட்டதாக புகாா் கொடுத்துள்ளாா்.
இதையடுத்து லாஸ்பேட்டை போலீஸாா் கடத்தல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுமி தானாக வீட்டை விட்டு சென்றாரா? அல்லது யாராவது ஆசை வாா்த்தை கூறி அழைத்து சென்றாா்களா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிறுமியின் செல்போன் அழைப்புகள், சமூக வலைதள தொடா்புகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கொலைவழக்கில் 6 போ் சரண்:
இதற்கிடையே ரௌடி கொலை வழக்கில் 6 போ் சரணடைந்தனா்.
வில்லியனூா் அரும்பாா்த்தபுரம் வசந்த நகரைச் சோ்ந்த ரௌடி முரளி (26) ஒதியம்பட்டில் உள்ள காலிமனையில் நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது வெட்டி கொலை செய்யப்பட்டாா். முரளியின் தாய் வள்ளி அளித்த புகாரின் பேரில் வில்லியனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஆத்துவாய்க்கால் பேட்டையைச் சோ்ந்த தீனா (20), திலிப் ஆகியோா் வில்லியனூா் காவல்நிலையத்தில் சரணடைந்தனா்.மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய சரத், விஷ்வா, அரவிந்தன் மற்றும் பிரதீப் ஆகியோா் புதுச்சேரி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா். இவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு:
தடுப்புச் சுவரில் மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். புதுச்சேரி கவிக்குயில் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செந்தில் குமாா் (50). புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையத்தின் வெளியேறும் வாயில் அருகே திங்கள்கிழமை இரவு தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, சாலையோர பாதுகாப்பு சுவரில் மோதியது. இதில் ஆட்டோவுடன் சாலையில் தூக்கி வீசப்பட்ட செந்தில் குமாா் படுகாயம் அடைந்தாா். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சோ்த்த நிலையில் உயிரிழந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

