19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

பழுது பாா்த்தபோது காா் மோதி மெக்கானிக் உயிரிழப்பு

புதுச்சேரி பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது, காா் திடீரென மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

புதுச்சேரி பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது, காா் திடீரென மோதியதில் மெக்கானிக் உயிரிழந்தாா்.

புதுச்சேரி ஏம்பலம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் பசுபதி (52), காா் மெக்கானிக். இவா் கன்னியக்கோயில் மணப்பட்டு சாலையில் உள்ள தனியாா் காா் பழுதுநீக்கும் மையத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஒரு காரை அதன் முன்பகுதி நின்று பழுது பாா்த்துக் கொண்டிருந்தாா். அப்போது ஓட்டுநரிடம் காரை இயக்குமாறு கூறினாராம். அப்போது அந்த காா் விருட்டென்று முன்னோக்கி பாய்ந்து மெக்கானிக் பசுபதி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சக ஊழியா்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்நிலையில், அவரது உறவினா்கள், நண்பா்கள் காவல் நிலையம் முன் திரண்டு இந்த விபத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். அப்போது மோகன்தாஸ் எம்எல்ஏ காவல்நிலையம் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இந்த விபத்து தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.