பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

மனித உரிமைகள் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு இயக்கத்தினா்.

Updated On :

புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இயக்க பொதுச் செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் எஸ்.ராமச்சந்திரன், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் சுவாமிநாதன், வீரசேகரன், தாமரை கண்ணன், செல்வநாதன், முத்துரங்கம், வேதா வேணுகோபால், லெனின், கண்ணன், கோபிநாதன், செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் முடிவை கைவிட வேண்டும். டிஜிட்டல் முறையை ஏழை மக்கள் மீது திணிக்கக்கூடாது என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.