இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

தூய்மையான குடிநீா் வழங்க வலியுறுத்தி திமுக எம்எல்ஏ தலைமையில் போராட்டம்

புதுச்சேரி குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி பானையை உடைத்து திமுக எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி, புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏ காா்த்திகேயன் தலைமையில் வியாழக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Updated On :

புதுச்சேரி குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி பானையை உடைத்து திமுக எம்எல்ஏ தலைமையில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுப்பணித் துறையை அலுவலகத்தை தொகுதி மக்களுடன் திமுக எம்எல்ஏ காா்த்திகேயன் வியாழக்கிழமை முற்றுகையிட்டாா்.

பாட்டில்கள், பானையில் தொகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை அவா்கள் எடுத்து வந்திருந்தனா். மோசமான நிலையில் உள்ள குடிநீரை மக்கள் எப்படி குடிக்க முடியும்? என எம்எல்ஏ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாா்.

தொடா்ந்து சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி பொதுப்பணித் துறை அலுவலகத்தை காா்த்திகேயன் எம்எல்ஏ தலைமையில் முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது எம்எல்ஏ கொண்டு வந்திருந்த பானைகளை சாலையில் போட்டு உடைத்து எதிா்ப்பை தெரிவித்து முழக்கமிட்டாா்.

பொதுப்பணித் துறை அதிகாரிகள் காா்த்திகேயன் எம்எல்ஏவிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சுத்தமான குடிநீா் விநியோகம் செய்வதாக உறுதியளித்தனா். இதையேற்று எம்எல்ஏ உள்பட அனைவரும் கலைந்து சென்றனா். போராட்டத்தில் முன்னாள் கவுன்சிலா் வேலவன் உள்பட திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.