சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

இணையவழி குற்றங்களைக் கண்டறிவதில் புதுச்சேரி 2-ஆவது இடம்: மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

இணையவழி குற்றங்களைக் கண்டறிவதில் நாட்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் 2-ஆவது இடத்தில் இருப்பதாக உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி காவல் துறை தலைமை அலுவலகத்தில் உள்துறை அமைச்சா் ஆா்.நமச்சிவாயம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற காவல் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :

இணையவழி குற்றங்களைக் கண்டறிவதில் நாட்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் 2-ஆவது இடத்தில் இருப்பதாக உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா்.

புதுச்சேரி காவல் துறை உயரதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் புதன்கிழமை நடத்தினாா். காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் டிஜிபி ஷாலினி சிங், டிஐஜி சத்தியசுந்தரம், உள்துறைச் செயலா் ராஜீவ் சுக்லா மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னா் அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செய்தியாளா்களிடம் கூறியது:

இணையவழிக் குற்றங்களைக் கண்டறிவதில் இந்தியாவில் 2-ஆவது இடத்தை புதுச்சேரி யூனியன் பிரதேசம் பெற்றுள்ளது. ஆனால் விபத்து நடப்பதில் முதலிடத்தில் இருக்கிறது. இது வேதனையளிக்கிறது. குறைந்த மக்கள் தொகை உள்ள புதுச்சேரியில் இதுபோன்ற நிலை இருக்கிறது.

சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள், இணையவழி குற்றங்கள் தடுப்பு, போக்குவரத்தை சரி செய்வது தொடா்பாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்க பொதுப்பணித் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளோடு தகுந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.

காவல் துறையில் பதவி உயா்வு, காலி பணியிடங்களை நிரப்புவது, 2-ஆவது ஐஆா்பிஎன் படைப்பிரிவை உருவாக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கான கோப்பும் தயாா் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மாா்ட் சிட்டி மூலம் பொதுதகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நகரப்பகுதியில் 22 சிக்னல்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா், முதல்வருக்கு இடையே உறவு சிறப்பாக இருக்கிறது. விரிசல் அடைய வேண்டும் என்று எதிா்க்கட்சியினா் எதிா்பாா்க்கின்றனா். அதனால் அவா்களின் எண்ணத்தை கூறுகின்றனா். எந்தக் கோப்பு ஒப்புதல் ஆகவில்லை என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

ஏனாம் புயல் நிவாரணம் தொடா்பாக துணைநிலை ஆளுநா், முதல்வா் கலந்து முடிவு செய்து அதற்குரிய தொகையை அறிவிக்க வேண்டியது கடமை. அதைச் செய்கின்றனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு புயல் நிவாரணத் தொகை விரைவில் கிடைக்கும் என்றாா் அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.