தில்லி காவல் துறை தலைமையகத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா ஆய்வு
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தில்லி காவல் துறை தலைமையகத்துக்குச் சென்று, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தில்லி காவல் துறை தலைமையகத்தில் மூத்த அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா. உடன் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தில்லி காவல் துறை தலைமையகத்துக்குச் சென்று, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது காவல் துறையின் தயாா் நிலை மற்றும் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
கடந்த அக். 24-ஆம் தேதி தில்லி காவல் துறை தலைமையகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்துக்கு 3 வாரங்களுக்கு பிறகு அமித் ஷா மீண்டும் அங்கு சென்றுள்ளாா். அந்தக் கூட்டத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா, காவல் ஆணையா் அனுராக் குமாா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
அப்போது பெண்களின் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தல், குற்றக் கும்பல்கள், போக்குவரத்து மேலாண்மை மற்றும் போராட்டங்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதற்கு முன்பு கடந்த 2022-ஆம் ஆண்டு ஆக.30-ஆம் தேதி தான் அமித் ஷா தில்லி காவல் துறை தலைமையகத்துக்குச் சென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

