இபிஎப் ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்திய ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) ஓய்வூதியா்கள் நலச்சங்கம் சாா்பில் மத்திய அரசுக்கு மனு அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி முதலியாா்பேட்டை 100 அடி சாலை இபிஎப் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க செயலா் குணசேகரன் தலைமை வகித்தாா்.
குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ரயில்வே கட்டண சலுகை வழங்க வேண்டும். இடைக்கால பரிந்துரையாக ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்த கோரிக்கை மனுக்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

