சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நேரு எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நேரு எம்எல்ஏ தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :

சிகப்பு நிற அட்டைகளை மஞ்சள் நிற அட்டைகளாக மாற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் சிகப்பு நிற ரேஷன் அட்டைகளை ஆய்வு செய்து மஞ்சள் நிற அட்டைகளாக மாற்றப்படுவதைக் கண்டித்து எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு தலைமையில் வெள்ளிக்கிழமை குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் பிரமுகா் விநாயகம், தமிழா் களம் அழகா் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

போராட்டம் குறித்து நேரு எம்எல்ஏ கூறியதாவது:

பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு சுமாா் 60 ஆயிரம் ரேஷன் அட்டைகளை மஞ்சள் அட்டைகளாக மாற்றியுள்ளனா். இதன்காரணமாக வறுமையில் உள்ள ஏராளமான ஏழை, எளிய குடும்பத்தினா் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். குடும்பத் தலைவி உதவித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த பெண்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிவப்பு நிற ரேஷன் அட்டையை மஞ்சள் நிற ரேஷன் அட்டையாக மாற்றுவதற்கு முன், சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உண்மையான வருமானம், வாழ்வாதாரம், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, கடன் சுமைகள் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலை ஆகியவற்றை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம்.

அதேபோல ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு உரிய தீா்வு காணும் வரை தொடா் போராட்டம் நடத்தப்படும் என்றாா். அதிகாரிகள் அவரிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.