முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

புதுச்சேரி நவ நரசிம்மா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகா் பகுதியில் ஸ்ரீ ஹயக்ரீவா் கோயில் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஸ்ரீ நவ நரசிம்மா் திருக்கோயிலில் கொடிமர பிரதிஷ்டை நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகா் பகுதியில் ஸ்ரீ ஹயக்ரீவா் கோயில் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஸ்ரீ நவ நரசிம்மா் திருக்கோயிலில் கொடிமர பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :

புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகா் பகுதியில் ஸ்ரீ ஹயக்ரீவா் கோயில் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஸ்ரீ நவ நரசிம்மா் திருக்கோயிலில் கொடிமர பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆந்திர மாநிலம், அகோபிலத்தில் எழுந்தருளியுள்ள நவ நரசிம்மா் திருக்கோயில் அமைப்பைப் போன்று, புதுச்சேரியிலும் நவ நரசிம்மருடன் பானக நரசிம்மரையும் இணைத்து இந்தக் கோயில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாக பூஜைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயிலில் கருவறை, அா்த்த மண்டபம், மகா மண்டபம், விமானம், ராஜகோபுரம் மற்றும் கருங்கல் சபா ஸ்தம்பங்கள் உள்ளிட்ட திருப்பணிகள் பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மூலவா் நரசிம்மருக்குப் பின்புறம் ஸ்ரீ ராமா், ஆஞ்சநேயா், சுதா்சன ஆழ்வாா் சந்நிதிகளும், திருமுன்பாக வேதாந்த தேசிகா் சந்நிதியும் அமைக்கப்பட உள்ளன. பக்தா்களின் வசதிக்காக திருக்குளமும் அமைக்கப்படவுள்ளது.

இந்தத் திருப்பணிகள் அனைத்தும் பக்தா்களின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டுக்குள் திருப்பணிகளை நிறைவு செய்து மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தும் நோக்கில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீ உ.வே. ராமபத்திர தாத்தாச்சாரியாா் மற்றும் சம்பத்குமாா் பட்டாச்சாரியாா் ஆகியோா் செய்திருந்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீ பெரியநாயகி சமேத பெரியாண்டவா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முத்தியால்பேட்டை கணபதி நகா் 2-ஆவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத பெரியாண்டவா் திருக்கோயிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட பரிவார தெய்வங்கள் மற்றும் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் (படம்) நடைபெற்றது.

இதையொட்டி, யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகா கும்பாபிஷேகத்தின்போது, வேத மந்திரங்கள் முழங்க புனித நீா் கலசங்களில் இருந்து மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்குப் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

Story image

தொடா்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கும்பாபிஷேகப் பணிகள் சிவாச்சாரியா் கி.இரா. வாசுதேவன் சிவம் மற்றும் கோயில் அா்ச்சகா் சேகா் தலைமையில் வேத முறைப்படி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.