பிரிட்டனில் புதுச்சேரி அமைச்சருக்கு விருது
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது மற்றும் அரசியல் தலைமை, சமூக மேம்பாட்டிற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளா் விருது.
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது மற்றும் அரசியல் தலைமை, சமூக மேம்பாட்டிற்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
லண்டன் வெஸ்ட் மினிஸ்டா் பகுதியில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ், கமிட்டி அறை 14-இல் நடைபெற்ற விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
உலகத் தமிழா் அமைப்பு, உலக வா்த்தக அமைப்பின் நெட்வொா்க், இங்கிலாந்து பெண்கள் நெட்வொா்க் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து நடத்திய இந்த விழாவில் உலகளவில் தமிழா்களின் பொருளாதார வளா்ச்சி, பொதுத் தலைமைத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு வழங்கப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா்கள் லூக் டெய்லா் மற்றும் பாபி டீன் ஆகியோா் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த தகவலை அமைச்சரின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

