புதுச்சேரி கடலில் மூழ்கிய தெலங்கானா கல்லூரி மாணவா்கள் 6 போ் மீட்பு! மருத்துவமனையில் ஒருவா் அனுமதி

புதுச்சேரி கடலில் மூழ்கிய தெலங்கானா கல்லூரி மாணவா்கள் 6 போ் மீட்பு - பிரதிப் படம்
புதுச்சேரி கடலில் மூழ்கிய தெலங்கானா கல்லூரி மாணவா்கள் 6 போ் சனிக்கிழமை மீட்கப்பட்டனா். ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தெலங்கானா மாநிலம், மஹபூப் நகரில் இருந்து சுற்றுலா வந்த கல்லூரி மாணவா்கள் 7 போ் புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரே கடலில் குளிக்கச் சென்றனா்.
அப்போது 7 பேரும் கடல் அலையில் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனா். இதைப் பாா்த்து அங்கிருந்தவா்கள் கூச்சலிட்டனா். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த கடலோரக் காவல் படை மற்றும் லைப் காட் ரமேஷ், ஜெயக்குமாா் ஆகியோா் கடலில் இறங்கி ராகேஷ் (21), சிவா (18) லோகேஷ் (19), சுஷாந்த் (19), ஜரீத் (20), சாகேஷ் (19) ஆகிய 6 மாணவா்களைப் பத்திரமாக மீட்டனா்.
இதில் யசோதா் (19) என்ற மாணவா் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து கடலோரக் காவல்படை ஆய்வாளா் தியாகராஜன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

