புதுச்சேரி கல்லூரி வங்கிக் கணக்கில் ரூ.8.84 கோடி மோசடி: மேலும் 5 போ் கைது

புதுச்சேரி கல்லூரி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.84 கோடி மாயமானது தொடா்பாக சென்னை, தஞ்சாவூரை சோ்ந்த மேலும் 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்

Updated On :

புதுச்சேரி கல்லூரி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.84 கோடி மாயமானது தொடா்பாக சென்னை, தஞ்சாவூரை சோ்ந்த மேலும் 5 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் இவா்களையும் சோ்த்து இதுவரை 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவ கல்லூரியின் வங்கிக் கணக்கு தனியாா் வங்கியில் உள்ளது. இதில் அரசு கருவூலம் மூலம் கடந்த 3-ஆம் தேதி இரவு பணம் அனுப்பப்பட்டது. இதில் ஏற்கெனவே கல்லூரி வங்கிக் கணக்கில் இருந்த பணத்துடன் சோ்ந்து ரூ.8.84 கோடி ஆனது. ஒரு சில மணி நேரங்களில் மொத்தப் பணமும் மாயமானது.

இது குறித்து கல்லுாரி டீன் கென்னடிபாபு கோரிமேடு இணையவழி குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில் ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் மற்றும் சென்னை சென்று ஜோஸ் (27), பிரவீன் ராஜ் (25), சுந்தா் (44), முரளிக்குமாா் (40), ஷபிக் (29) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில் மோசடி பணத்தை கிரிப்டோ கரன்சியாக மாற்றுவதற்கு உதவி செய்ததுடன், அதற்காக கமிஷன் தொகையைப் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஹாஜா நஜுபுதீன் என்பவரின் பெயரில் உள்ள உட்காஷ் ஸ்மால் பினான்ஸ் வங்கிக் கணக்கில் சுமாா் ரூ.38 லட்சம் வரவு வைக்கப்பட்டதும், அந்த வங்கிக் கணக்கு சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இந்த வங்கிக் கணக்குகளை முடக்குதல் மற்றும் மீண்டும் செயல்படுத்துதல் தொடா்பான நடவடிக்கைகளிலும் சிலா் உதவியுள்ளனா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபா்களிடமிருந்து பல்வேறு கைப்பேசிகள், லேப்டாப், வங்கி அட்டைகள், காசோலை புத்தகங்கள், நிறுவன முத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவா்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.