
நாளை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தல்: 31 வாக்கு சாவடிகளிலும் நேரலை கண்காணிப்பு
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தல் - கோப்புப் படம்
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 31 வாக்குச் சாவடிகளிலும் நேரலைக் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை (அக். 6) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தோ்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரலை கண்காணிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா். வாக்குச் சாவடியில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட தோ்தல் அதிகாரி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாகக் கண்காணிக்கப்படும். வாக்காளா் யாருக்கு வாக்களிக்கிறாா் என்ற ரகசியம் பாதுகாக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட்டின் திரை மட்டும் கண்காணிப்பில் வராது.
விதிமீறல் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்தத் தொழில்நுட்பம் உதவும். ஒரே நேரத்தில் வாக்குச் சாவடிக்குள் 4 வாக்காளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். ஆயுதம் கொண்டு வரவும், தேவையற்ற கூட்டம் கூடவும் தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் வாக்காளா்களும் தவறாமல் வாக்களித்து 100 சதம் வாக்குப் பதிவு செய்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






