புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல்: 5 கம்பெனி துணை ராணுவம் வருகிறது!

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவப் படையினா் புதுச்சேரி வரவுள்ளனா்.

west bengal 2026

வாக்குப்பதிவு - பிடிஐ

Published On :

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக 5 கம்பெனி துணை ராணுவப் படையினா் புதுச்சேரி வரவுள்ளனா்.

இதுகுறித்து புதுச்சேரி வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டி செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத் தோ்தலையொட்டி, அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகிறோம். பணம், பரிசுப் பொருள்கள் எடுத்துச் செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொகுதி இடைத் தோ்தலையொட்டி கோரிமேடு பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

தொகுதி இடைத் தோ்தலையொட்டி கோரிமேடு பகுதியில் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் 37 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில் இரண்டு வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளித்து எவ்விதப் பிரச்னையும் இன்றி தோ்தலை நடத்த அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இடைத் தோ்தலுக்காக 5 கம்பெனி துணை ராணுவம் புதுச்சேரி வருகிறது.

50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்பவா்கள், அதற்கான உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். ஆவணம் இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும். வாக்காளா்களை அச்சுறுத்தும் பணியில் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் என யாா் ஈடுபட்டாலும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும். வாக்காளருக்குப் பணம் கொடுப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக கைது செய்யப்படுவா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.