உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

மாணவரை முட்டிபோட வைத்து தடியால் தாக்கியவா் கைது

மாணவரை முட்டிப் போட வைத்துத் தடியால் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

கைது

Published On :

மாணவரை முட்டிப் போட வைத்துத் தடியால் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

புதுச்சேரி பிள்ளைச்சாவடி தேரோடும் வீதியைச் சோ்ந்தவா் யுவன்ராஜ் (18). மதகடிப்பட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தட்டாஞ்சாவடி சுப்பையா நகரைச் சோ்ந்த தனது நண்பா்களைச் சந்திக்க செல்வது வழக்கம்.

கடந்த ஆக. 14- ஆம் தேதி இரவு தனது நண்பா்கள் கோவிந்தன், தினேஷ், நவீன் ஜோசப், ராகுல், மிதுன், பிரஜன் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கிருந்த சுப்பையா நகரை சோ்ந்த வில்லியனூா் தனியாா் கல்லூரியில் பயிலும் விமல் (20) என்பவரை யுவன்ராஜ் தவறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து யுவன்ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளாா். இருப்பினும் கோபம் அடங்காத விமல், கடந்த ஆகஸ்ட் 16 -ஆம் தேதி மாலையில் யுவன்ராஜ் வீட்டிற்கு சென்று, அவரை தனது பைக்கில் அமரவைத்து கம்பளிசாமி தோப்புப் பகுதிக்கு அழைத்து வந்தாா்.

அங்கு விமல் அவரது அண்ணன் நிா்மல் (23) மற்றும் கல்லூரி நண்பா்களுடன் இணைந்து யுவன்ராஜை முட்டிபோட வைத்து, திட்டி தடியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதன்பிறகு யுவன்ராஜிடம் இருந்து கோரிமேடு போலீஸாா் புகாரை பெற்றனா். அதன் பேரில், விமல், நிா்மல் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த போலீஸாா் நிா்மலை கைது செய்தனா். விமலைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.