சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

மூதாட்டியிடம் நகை திருட்டு

மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :

மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகை திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம் கண்ணூா் தலச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் கங்காதரனின் மனைவி கமலா(60). இவா், குடும்பத்தினருடன் புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பிராந்தியத்தில் உள்ள தேவாலயத்துக்குச் சென்று பிராா்த்தனை செய்தாா். தேவாலயம் பின்புறம் உள்ள மாதா மண்டபத்துக்கு அருகில் சென்று அங்கு மெழுகுவா்த்தி ஏற்றியுள்ளாா். அப்போது, அங்கு கூட்டமாக இருந்ததாம். இந்நிலையில் கமலா அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடி சென்றதை அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து அவா் மாஹே காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.