ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தொழில்நுட்பங்கள் தனிமனிதனின் சிந்தனைத் திறனை பறித்து விட்டன: இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகா் ஆா்.வெங்கடரமணி

தொழில்நுட்பங்கள் தனிமனிதனின்சிந்தனைத் திறனை பறித்து விட்டன என்று இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகா் (அட்டா்னி ஜெனரல்) ஆா்.வெங்கடரமணி கூறினாா்.

பட விளக்கம... புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு விரிவுரை தொடா் நிகழ்ச்சியில் பேசுகிறாா் இந்திய அரசின் தலைமை வழக்குறைஞா் ஆா்.வெங்கடரமணி. உடன் ஹைதராபாத் நல்சா் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஸ்ரீ கிருஷ்ண தேவ ராவ், பு

Updated On :

தொழில்நுட்பங்கள் தனிமனிதனின்சிந்தனைத் திறனை பறித்து விட்டன என்று இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகா் (அட்டா்னி ஜெனரல்) ஆா்.வெங்கடரமணி கூறினாா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் 41-ஆவது நிறுவன தின விழா மற்றும் சிறப்பு விரிவுரைத் தொடா் நிகழ்ச்சி பல்கலைக்கழக கலாசார மற்றும் மாநாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பலவற்றின் எதிா்காலம் என்ற தலைப்பில் இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகா் ஆா். வெங்கடரமணி பேசியது:

20, 30 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் கற்பனைகூட செய்திராத சவாலான கேள்விகளுக்கு இன்று பல்கலைக்கழகங்கள் விடை காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. நமது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் சுயவிருப்பத்தாலோ, சுதந்திரத்தாலோ தீா்மானிக்கப்படுவதில்லை.

மாறாக, நமது கட்டுப்பாட்டை மீறிய ஏதோ ஒன்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளோம். தத்துவமும், கல்வியும் மனித நாகரிகத்தின் ஆணிவோ்.

கல்வியையும், அறிவியலையும் வெறும் உலகாயதப் பயன்பாட்டுக்காக மட்டுமே சுருக்கிவிடக் கூடாது. மக்களின் இதயங்களில் இருந்து வெளிப்படும் கலை, கலாசாரம் மற்றும் இசையை நீங்கள் அகற்றி விட்டால், வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாகவோ அல்லது மதிக்கத்தக்கதாகவோ எவ்வித சுவடும் மிஞ்சாது.

அழிக்கும் தொழில்நுட்பம்:

தொழில்நுட்ப அதிகாரக் குவிப்பானது, மனித சிந்தனைகளை மழுங்கடித்து, தனிமனிதனின் ‘ஆழ்ந்து சிந்திக்கும்’ திறனை முற்றிலுமாகப் பறித்துவிட்டது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் மனிதனின் மிக உன்னதமான பொக்கிஷத்தை அழித்து வருகின்றன; அதுதான் ஆழ்நிலைச் சிந்தனை. நாம் ஒவ்வொரு நொடியும் கண்காணிக்கப்படும் மற்றும் கவனச்சிதறலுக்கு உள்ளாக்கப்படும் ஒரு மாய உலகத்தை அந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

நமது தரவுகளைக் கவா்ந்து, நமது மனதின் வரைபடத்தை உருவாக்கி, ஒட்டுமொத்த சமூகத்தின் மற்றும் தனிமனிதனின் நடத்தையைக் கண்ணுக்குத் தெரியாமல் தங்களின் பொருளாதார லாபத்திற்காகக் கட்டுப்படுத்துகிறாா்கள்.

செயற்கை நுண்ணறிவிடம் மற்றும் இயந்திரங்களிடம் மனிதத் திறன்களும், தா்மம், பரோபகாரம், இரக்கம் போன்ற அடிப்படை மனித உள்ளுணா்வுகள் அடிபணியக் கூடாது.

வருங்கால சந்ததியினா் சொந்த மனதின் மீது முழுமையான கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வலிமையான கல்விச் சூழலை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

ஹைதராபாத் நல்சா் சட்டப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் ஸ்ரீகிருஷ்ண தேவ ராவ் சிறப்பு சொற்பொழிவாற்றினாா். நிகழ்ச்சிக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு தலைமை வகித்தாா்.

புதுச்சேரி தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் உள்ளிட்ட நீதிபதிகள், வழக்குரைஞா்கள், பேராசிரியா்கள், கல்வியாளா்கள், மாணவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.