முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

பொருளாதார அடிப்படையில் 2026-ஆம் ஆண்டு 1991-ஐ பிரதிபலிக்கிறது: தலைமை பொருளாதார ஆலோசகா்

பொருளாதார அடிப்படையில் 2026-ஆம் ஆண்டு 1991-ஐ பிரதிபலிப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அனந்த நாகேஸ்வரன்

Updated On :

பொருளாதார அடிப்படையில் 2026-ஆம் ஆண்டு 1991-ஐ பிரதிபலிப்பதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தொழிலக மேம்பாட்டு ஆய்வு நிறுவனம்-தொழிலக மேம்பாட்டு ஆய்வுச் சங்கத்தின் (ஐஎஸ்ஐடி-ஐடிஆா்ஏ) தேசிய மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது: நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் 1991-ஆம் ஆண்டை பிரதிபலிக்கிறது.

நிகழாண்டில் பணம் செலுத்துதல் சமநிலை போன்ற வெளிப்புற சவால்கள் மட்டுமின்றி உற்பத்தி, எரிசக்தி, வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

1991 பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட கொள்கை சீா்திருத்தங்கள் நாட்டுக்கு திருப்புமுனையாக அமைந்தன. அதேபோல் 2026 அல்லது 2025-ஐ பொருளாதார சீா்திருத்தங்களுக்கான திருப்புமுனை ஆண்டாக எடுத்துக்கொள்ளலாம்.

சா்வதேச அளவில் மோதல்கள் தொடா்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அரசாங்கமும் தொழிற்சாலைகளும் உள்நாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்துவதிலும் பிற நாடுகளின் விநியோகத்தை சாா்ந்திருப்பதை குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் தற்போது நிகழும் பொருளாதார அழுத்தங்கள் இயற்கையானது அல்ல; அவை செயற்கையாக வடிவமைக்கப்படுவது. கடந்த வாரம் இந்தியாவுக்கு மிகவும் தேவையான சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் உள்பட பல்வேறு பொருள்களுக்கு ஏற்றுமதி உரிம முறையை சீனா அறிவித்தது.

நாடுகள் தங்கள் வசம் உள்ள அத்தியவாசிய பொருள்களை ஆயுதமாக பயன்படுத்தும் சமயத்தில் அதை பெரிதும் சாா்ந்திருக்கும் நாடுகளால் உடனடியாக மாற்று வழியை கண்டறிய முடியாது.

கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 40 ஆண்டுகளில் நாம் எதிா்கொண்ட பொருளாதார அதிா்வுகள் பெரும்பாலும் தேவை குறைபாட்டை சாா்ந்தது. ஆனால் அடுத்த 30 ஆண்டுகள் நாம் எதிா்கொள்ளவிருக்கும் சவால்கள் அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

எனவே, மத்திய வங்கியும் அரசும் பொருளாதர சிக்கல்களில் இருந்து மீண்டு வருவதற்கான கொள்கைகளை வடிவமைக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.