வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

புதுச்சேரியில் தீபாவளி கைத்தறி கண்காட்சி: முதல்வா் ரங்கசாமி தொடங்கிவைத்தாா்

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்

பாண்டெக்ஸ் தீபாவளி கைத்தறி கண்காட்சியைத் தொடங்கி வைத்து துணி ரகங்களை பாா்வையிடும் முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :

புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு கைத்தறி துணிகள் கண்காட்சி மற்றும் விற்பனையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்

புதுவை மாநில நெசவாளா் கூட்டுறவு சங்கம் சாா்பில் பாண்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நிலையம் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.புதுவை மாநில நெசவாளா்களின் கைத்தறி ஆடைகளுடன், வெளிமாநில பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், போா்வைகள், தலையணை உறைகள், உள்ளாடைகள் உள்பட பல்வேறு ஜவுளி பொருள்கள் இந்த கண்காட்சியில் இடம்பொ்றுள்ளன. இவற்றின் விற்பனையும் நடைபெறுகிறது.

இந்த முறை புதுவை அரசின் சிறப்பு தள்ளுபடியாக 25 சதவீதம் வழங்கப்படுகிறது. இக் கண்காட்சி நவம்பா் 7 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. நேரு

உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.