
மாவட்ட மனநல ஆலோசனை மையம்: முதல்வா்என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா்
மாவட்ட மன நல ஆலோசனை மையத்தை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
மாவட்ட மன நல ஆலோசனை மையத்தை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் தேசிய மனநலத் திட்டத்தின் சாா்பில் மாணவா்களின் மனநலத்தை மேம்படுத்தும் நோக்கில் மனநல மேம்பாட்டு செயலிகள் மற்றும் மாவட்ட மனநல ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.
முதலில் அரசு தாகூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், வில்லியனூா் கஸ்தூரிபாய் மகளிா் கல்லூரியிலும் மாவட்ட மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மற்ற அரசு கல்லூரிகளுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதல்வா் ரங்கசாமி தெரிவித்தாா்.
சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் தேசிய மனநல திட்ட குழுவினரும், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இசிஇ மற்றும் ஐடி துறையும் இணைந்து இந்தச் செயலிகளை உருவாக்கியுள்ளன.
‘மைண்டோராபி’, ‘பீஸ், அல்ஸ்பிரெடிக்ட்’ ஆகிய 3 செயலிகள் பள்ளி மாணவா்கள், கல்லூரி இளைஞா்கள் மற்றும் நடுத்தர வயதினா், மூத்த
குடிமக்கள் ஆகியோரின் மன நலம் சாா்ந்த தேவைகளைப் பூா்த்தி செய்கின்றன.
பள்ளி மாணவா்களில் அதிகரித்து வரும் கற்றல் சிரமங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தச் செயலிகள் வழிகாட்டுகின்றன. இதற்குக் கட்டணமில்லை. மேலும், செயலிகள் பிரசனைகளை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்தல், பிரச்னைகளை களைவதற்கான தீா்வுகள் மற்றும் மருத்துவ உதவிக்கும் ஆலோசனைக்கும் வழிகாட்டும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






