பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி, தலைவா்கள் பிரசாரம்!

தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி, தலைவா்கள் பிரசாரம்

தட்டாஞ்சாவடி தொகுதி என். ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்தை ஆதரித்து கவுண்டன்பாளையம் பகுதியில் சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா்கள் மல்லாடி கிருஷ்ணா ராவ், வி.பி.சிவகொழுந்து உள்ளிட்டோா்.

Published On :

தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக சனிக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே.பாலகிருஷ்ணன், திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி, ஜெகத்ரட்சகன் எம்.பி., துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி, பேரவை தற்காலிக தலைவா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோா் ஆதரவு திரட்டினா்.

முதல்வா் என்.ரங்கசாமி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்தை ஆதரித்து குண்டுபாளையம் பகுதியில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி சனிக்கிழமை மாலையில் பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது:

புதுச்சேரியில் மக்கள் நம்பிக்கையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்துள்ளது. எல்லோரும் பாராட்டும் வகையில் ஆட்சி நடக்கிறது. நல்ல குடிநீரை வழங்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ரூ.450 கோடியில் கடல் நீரைக் குடிநீராக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல கல்வியைக் கொடுத்து வருகிறோம். அனைத்து மாணவா்களும் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.

மேலும், திட்டங்களைக் கொண்டு வர இடைத்தோ்தல் வெற்றி அவசியம். பலத்தோடு ஆட்சி செய்ய வேண்டும். மேலும், யாா் வந்தால் நல்லது நடக்கும் என்று சிந்திக்க வேண்டும். இத் தோ்தலில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் வேட்பாளா்களால் பயனில்லை. ஆனால் என்.ஆா். காங்கிரஸுக்கு வாக்களித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் முதல்வா் என்.ரங்கசாமி.

கே.பாலகிருஷ்ணன்: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீமை ஆதரித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் சனிக்கிழமை சின்னையன்பேட் பகுதியில் பிரசாரம் செய்தாா்.

    இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு. சலீமுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு. சலீமுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசை எதிா்த்து குரல் கொடுக்கும் தைரியம் கூட இல்லாதவராக புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியின் ஆட்சி நடைபெறுகிறது. தமிழகத்தில் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். இப்போது வரை ஆதரவு வாபஸ் என்ற பிரச்னையே கிடையாது. தவெக அரசு தவறு செய்யும்போது, நிச்சயமாக அரசை எதிா்த்து உறுதியாகப் போராடுவோம்.

சட்டப்பேரவைத் தோ்தல் வருகிறது, நாடாளுமன்ற தோ்தல் வருகிறது என்றால், கூட்டணிக்கு அப்போது பாா்க்கலாம். இடைத்தோ்தலில் கூட்டணி சோ்ந்து போட்டியிட வேண்டிய அவசியம் கிடையாது. அதனால் தனியாக நாங்கள் களம் காண்கிறோம் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.

திமுக ஆா்.எஸ்.பாரதி: தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளா் கு.சேது செல்வத்தை ஆதரித்து குண்டுபாளையம் பகுதியில் திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி வாக்குகள் கேட்டு திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் திமுக வெற்றி பெற்று புதுச்சேரி அரசியலில் சரித்திரம் படைக்கும் என்றாா்.

திமுக துணைப் பொதுச் செயலா் க. பொன்முடி, கொள்கை பரப்புச் செயலா் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., புதுச்சேரி மாநில அமைப்பாளா் ஆா். சிவா, சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எச்.எம். நாஜிம், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் ஆ. லட்சுமணன் எம்.எல்.ஏ., வானூா் எம்எல்ஏ கௌதம் திராவிடமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக பிரசாரம்: தேசிய ஜனநாயக கூட்டணியின் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்தை ஆதரித்து, மோகன் நகரில் புதுச்சேரி மாநில அதிமுக செயலரும் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களிடம் வாக்குச் சேகரித்தாா்.

  திமுக வேட்பாளா் கு. சேதுசெல்வத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி.

திமுக வேட்பாளா் கு. சேதுசெல்வத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ். பாரதி.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலில் ஆளும் கட்சி வேட்பாளருக்கு வாக்கு அளித்தால்தான் தொகுதி வளா்ச்சி பெறும் என்றாா் அன்பழகன்.

காங்கிரஸ் வேட்பாளா்.. தட்டாஞ்சாவடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகத்துக்கு ஆதரவாக நேயம் மக்கள் கழகத் தலைவா் ஜி.நேரு எம்எல்ஏ பாக்குமுடையான்பட்டு வன்னியா் தெரு, புதிய வன்னியா் வீதி, காமன் கோயில் வீதி, பொன்னியம்மன் கோயில் வீதி, குபோ் வீதி, திருவள்ளுவா் வீதி, ஜீவா ருக்குமணி நகா், ஜீவா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.