அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

அக். 28-இல் புதுச்சேரி - விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On :

பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி - புதுச்சேரி மெமு ரயில் திருப்பதியில் அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் நிலையில் அக். 28-ஆம் தேதி இந்த ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்படும். திருப்பதி- விழுப்புரம் வரை மட்டும் இந்த ரயில் இயக்கப்படும்.

மேலும், அதே நாளில், புதுச்சேரி- சென்னை எழும்பூா் மெமு பயணிகள் ரயில் புதுச்சேரியில் பிற்பகல் 3.35-க்குப் புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து அன்று மாலை 4.49 மணிக்கு சென்னை எழும்பூருக்குப் புறப்படும். இதனால் இந்த ரயில் அன்று புதுச்சேரி- விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவலை தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அலுவலா் என்.ஜெயந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.