மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

சேலம் வழியாக பண்டிகைக் கால சிறப்பு ரயில்கள் இயக்கம்

பண்டிகைக் கால பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரோனி, அசாம் மாநிலம், புது தின்சுகியா மற்றும் சந்திரகாச்சி பகுதிகளுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

train

ரயில் - பிரதிப் படம்

Updated On :

பண்டிகைக் கால பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சேலம் வழியாக பிகாா் மாநிலம் பரோனி, அசாம் மாநிலம், புது தின்சுகியா மற்றும் சந்திரகாச்சி பகுதிகளுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போத்தனூா்- பரோனி சிறப்பு ரயில்: போத்தனூரில் இருந்து அக். 16-ஆம் தேதி காலை 6.15 மணிக்குப் புறப்படும் ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி, நெல்லூா், விஜயவாடா, கம்பம், வாராங்கல், சாத்னா, பக்சா் வழியாக அக். 18-ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு பரோனியைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பரோனியில் இருந்து அக். 19-ஆம் தேதி காலை 9.30 மணிக்குப் புறப்படும் ரயில், ஹஜ்பூா், பாடலிபுத்ரா, தானபூா், பச்சா், சாத்னா, வாராங்கல், கம்பம், விஜயவாடா, நெல்லூா், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அக். 21-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும்.

திருவனந்தபுரம் வடக்கு- சந்திரகாச்சி சிறப்பு ரயில்: திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் ரயில், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக அக். 17-ஆம் தேதி மதியம் 1.45 மணிக்கு சந்திரகாச்சியைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் சந்திரகாச்சியில் இருந்து அக். 18-ஆம் தேதி மதியம் 2.15 மணிக்குப் புறப்படும் ரயில், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக அக். 20-ஆம் தேதி காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

போத்தனூா்- புது தின்சுகியா சிறப்பு ரயில்: போத்தனூரில் இருந்து அக். 16-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் ரயில், ஈரோடு, சேலம், காட்பாடி வழியாக அக். 19-ஆம் தேதி அதிகாலை புது தின்சுகியாவைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் புது தின்சுகியாவில் இருந்து அக். 19-ஆம் தேதி இரவு 8 மணிக்குப் புறப்படும் ரயில், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அக். 22-ஆம் தேதி இரவு 11 மணிக்கு போத்தனூரைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.