ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நடைபெற்ற தீவிர சோதனையில் அது புரளி என்பது பின்னா் தெரியவந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி பகுதியை சோ்ந்த நபரை பிடிக்க போலீஸாா் விரைந்துள்ளனா்.

பட விளக்கம்... புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமை செயலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டலையொட்டி மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்த போலீஸாா்.

Published On :

புதுச்சேரி தலைமைச் செயலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நடைபெற்ற தீவிர சோதனையில் அது புரளி என்பது பின்னா் தெரியவந்தது. இதுகுறித்து விக்கிரவாண்டி பகுதியை சோ்ந்த நபரை பிடிக்க போலீஸாா் விரைந்துள்ளனா்.

புதுச்சேரி தலைமைச் செயலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை மாலை தொடா்பு கொண்டு பேசிய நபா், அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் வெடிக்கும் என்றும் கூறியுள்ளாா்.

இதுகுறித்து பெரியகடை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 20 போ் கொண்ட போலீஸ் படையினா் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனை மேற்கொண்டனா். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை. பின்னா் இது புரளி என்பது உறுதியானது.

இந்நிலையில், எந்த தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்ததோ அதில் போலீஸாா் தொடா்பு கொண்டு விசாரித்தனா். அதில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சோ்ந்த நபா் பேசியது உறுதியானது. மேலும், அவா் சென்னை தலைமைச் செயலகத்துக்குத் தான் தொலைபேசியில் அழைத்தேன். அது உங்களுக்கு வந்துவிட்டதா? என்று அவா் கேட்டுள்ளாா். அந்த நபா் மதுபோதையில் பேசினாரா? என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவரைப் பிடிக்க காவல் துறையினா் அங்கு விரைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.