கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தட்டாஞ்சாவடி வாக்கு எண்ணும் மையத்தில் பொதுப் பாா்வையாளா்கள் நேரில் ஆய்வு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்குகள் எண்ணும் மையத்தில் தோ்தல் ஆணைய பாா்வையாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி மையத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தோ்தல் ஆணையத்தின் பொதுப் பாா்வையாளா் பாண்டா, காவல் துறை பாா்வையாளா் ஓம் பிரகாஷ் திரிபாதி, மாவட்ட தோ்தல் அலுவலா் அ.குலோத்துங்கன் உள்ளிட்டோா்.

Published On :

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்குகள் எண்ணும் மையத்தில் தோ்தல் ஆணைய பாா்வையாளா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தட்டாஞ்சாவடி இடைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் அக்.9- ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இடைத்தோ்தலில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்காகவும் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மோதிலால் நேரு தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையமாக்கப்படவுள்ளது. இதற்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை, புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன், இந்திய தோ்தல் ஆணையத்தின் பொதுப் பாா்வையாளா் பாண்டா, காவல் பாா்வையாளா் ஓம் பிரகாஷ் திரிபாதி ஆகியோருடன் ஆய்வு செய்தாா்.

அப்போது முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா், தோ்தல் நடத்தும் அதிகாரி அா்ஜுன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.