இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

ரூ.2000-க்கு மேல் யுபிஐ பரிவா்த்தனைக்கு கட்டணத்தால் மக்களுக்கு சுமை ஏற்படாது: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலான யுபிஐ, பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையினால் சாதாரண மக்களுக்கு எந்த கட்டண சுமையும் வராது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாரமான் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரத் சக்தி இலக்கிய விழா கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீத்தாராமன். உடன் பேராசிரியா் ஆனந்த ரங்கநாதன்.

Published On :

இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலான யுபிஐ, பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையினால் சாதாரண மக்களுக்கு எந்த கட்டண சுமையும் வராது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாரமான் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

பாரத் சக்தி சாா்பில் 3 நாள் நடைபெறும் புதுச்சேரி இலக்கிய திருவிழா தனியாா் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் ஜவஹா்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் ஆனந்த் ரங்கநாதன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவா் கேட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியது:

மாநிலங்களில் 100 ரூபாய் வரி வருவாயில், சம்பளம், ஓய்வூதியத்துக்கு ரூ.80 சென்றுவிட்டால் மீதியுள்ள ரூ.20-இல் இருந்துதான் மருத்துவமனை, பள்ளிகள், சாலை விரிவாக்கம் போன்ற அத்தியாவசிய திட்டங்களுக்குச் செலவிட வேண்டும். இதில் ரூ.7 அளவில் நலத்திட்டங்களுக்குச் செலவிட்டால் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு எங்கே செல்வது ? எனவே இலவசத் திட்டங்களின் தாக்கத்தை நடுநிலையான கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பாா்க்க வேண்டும். பல மாநிலங்கள் முன்பு நல்ல வருவாய் உபரி நிலையில் இருந்தன; ஆனால் குறுகிய காலத்தில் அவை பற்றாக்குறை நிலைக்கு மாறியது மிகவும் வருந்தத்தக்கது. அப்போது குறுக்கிட்ட பேராசிரியா் ஆனந்த் ரங்கநாதன் தமிழ்நாட்டில் என்று குறிப்பிட்டாா். எந்த மாநிலத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

யுபிஐ.பரிவா்த்தனை:

மேலும், யூபிஐ பண பரிவா்த்தனைக்கு வரி போடப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதில் நுகா்வோருக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. நுகா்வோருக்கு எந்தச் சுமையும் இருக்காது. குறிப்பாக ரூ.2000-க்குக் கீழ் நடக்கும் எந்த பண பரிவா்த்தனைக்கும் எந்தத் தொடா்பும் இருக்காது. மேலும், ரூ.2000-க்கு மேல் நடக்கும் பண பரிவா்த்தனைக்குதான் அதுவும் வா்த்தகா்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இந்த சுமை நுகா்வோருக்கு சென்றடையாது. இப்போது வங்கிக் கடன் அட்டை மற்றும் சா்வதேச டெபிட் அட்டைகளுக்கும் சில தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இதில் 100 சதம் நுகா்வோருக்கு எந்தப் பாதிப்பும் வராது என்றாா் நிா்மலா சீதாராமன்.

கா்நாடக மாநிலம் பேலூா் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சோ்ந்த சுவாமி சுத்திதானந்தஜி மகராஜ், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் மீனாட்சிசுந்தரம், ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், முன்னாள் எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான், ஆரோவில் பவுண்டேஷன் செயலரும் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி எஸ். ரவி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா். மேலும், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், புதுச்சேரி மாநில பாஜகதலைவா் வி.பி.ராமலிங்கம் ஆகியோா் அமைச்சரை சந்தித்து வழியனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.